இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

உலக மக்கள் தொகை 10 கோடியாக குறையக்கூடும் – அமெரிக்க பேராசிரியர் அதிர்ச்சி தகவல்

2300ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 10 கோடியாக குறையக்கூடும் அமெரிக்க பேராசிரியர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் 2300ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 10 கோடியாக குறையக்கூடும் என்று அமெரிக்காவை சேர்ந்த கணினி அறிவியல் பேராசிரியர் சுபாஷ் காக் தெரிவித்தார்.

டெர்மினேட்டர் பாணி அணு ஆயுதப் போரினால் அல்ல, மாறாக மனிதனின் வேலைகளை ஏஐ-க்கு மாற்றுவதன் மூலம் மக்கள் தொகையில் சரிவு ஏற்படும் என்றார்.

வேலை வாய்ப்பு இழப்பு குறிப்பிடத்தக்க பிறப்பு விகித சரிவுக்கு வழிவகுக்கும் என்றும், ஐரோப்பா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் மக்கள் தொகை குறைந்து வருவதையும் சுபாஷ் காக் சுட்டிக்காட்டினார்.

வேலை இல்லாதவர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள தயங்குவார்கள் என்பதால், பிறப்பு விகிதம் வீழ்ச்சியடையும் என்றும், இதனால் உலக மக்கள் தொகைக்கு பேரழிவு ஏற்படக்கூடும் என்றும் கூறினார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!