ஜிப் கார் (Zip Car) வெளியேற்றம்; லண்டன் கார் பகிர்வு சந்தையில் புதிய போட்டி.
இங்கிலாந்தில் ஜிப் காரின் (Zip Car) சேவை விரைவில் மூடப்படுவதால், ஐரோப்பாவின் மிகப் பாரிய நகரங்களில் ஒன்றான லண்டன் கார் பகிர்வுச் சந்தையில் ஒரு பாரிய வெற்றிடம் உருவாகியுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பல கார் நிறுவனங்கள் லண்டனில் தங்கள் வியாபாரத்தை ஆரம்பிப்பது அல்லது விரிவுபடுத்துவது தொடர்பில் பரிசீலித்து வருகின்றன.
கார் தயாரிப்பாளரான ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) க்குச் சொந்தமானபிரீ 2 மூவ் (Free2Move), லண்டன் சந்தையை உன்னிப்பாகக் கண்காணிப்பதாகத் தெரிவித்துள்ளது. அத்துடன், எண்டர்பிரைஸ் கார் கிளப் (Enterprise Car Club) மற்றும் கோ வீல்ஸ் (Co Wheels) போன்ற நிறுவனங்களும் லண்டன் பெரு நகரங்களுடன் தமது செயற்பாடு விருப்பங்களை தீவிரமாக ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளன.
பொதுப் போக்குவரத்தை நம்பியுள்ள லண்டன், கார் பகிர்வுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய சந்தைகளில் ஒன்றாகக் கருதப்படுவது இந்த நிறுவனங்களின் வரவுக்குக் காரணமாகும்.





