உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல்

வங்காளதேசத்தின்(Bangladesh) முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா(Khaleda ⁠Zia) தனது 80வது வயதில் இன்று காலமானார்.

டாக்காவில்(Dhaka) உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்தார்.

கலீதா ஜியா கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிகிச்சைப்பெற்று வந்தார்.

இந்நிலையில், மறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அந்தவகையில், வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்(Muhammad Yunus) தனது X பக்கத்தில் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தியில், ஜியாவின் மறைவால் தான் மிகுந்த வருத்தமும் துயரமும் அடைந்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், நாடு ஒரு அரசியல் தலைவரை மட்டுமல்ல, வங்கதேச வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உயர்ந்த அரசியல்வாதியையும் இழந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய(India) பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) ஒரு அறிக்கையில், “வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமராக, வங்காளதேசத்தின் வளர்ச்சிக்கும், இந்தியா-வங்காளதேச உறவுகளுக்கும் அவர் ஆற்றிய முக்கிய பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

“கலீதா ஜியாவின் குடும்பத்தினருக்கும், வங்காளதேச மக்கள் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான இழப்பைத் தாங்கும் வலிமையை அவரது குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் வழங்குவானாக” என்று நரேந்திர மோடி Xல் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான்(Pakistan) பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்(Shehbaz Sharif) ஒரு இரங்கல் செய்தியில், ஜியாவின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்ததாகவும் வங்காளதேசத்திற்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்த ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்ற ஒரு தலைவர் என்று அவரை விவரித்தார்.

இவர்களில் தொடர்ந்து, இலங்கையின்(Sri Lanka) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ(Namal Rajapaksa) ஜியாவின் மறைவு ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பெரும் இழப்பு என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!