டொனால்ட் ட்ரம்பிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து!

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக ட்ரம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் உலக தலைவர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
அந்தவகையில் ம் ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டர் ஆர்பன், புளோரிடாவில் ஆதரவாளர்கள் முன்னிலையில் வெற்றி பெற்ற தனது நண்பர் டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
அவரை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ட்ரம்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதேபோல் டொனால்ட் ட்ரம்பின் வெளிப்படையான வெற்றிக்கு பிரான்ஸ் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அதிக அமைதி மற்றும் செழிப்புக்காக நான்கு வருடங்கள் தொடர்ந்து பணியாற்ற தயார் எனக் கூறியுள்ளார்.
(Visited 16 times, 1 visits today)