குரங்கம்மை தொடர்பில் உலக சுகாதார நிறுவனத்தின் விசேட அறிவிப்பு
குரங்கம்மை எனப்படும் mpox புதிய COVID19 நோய் அல்ல என உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
அது பற்றிய பதற்றத்தைக் குறைக்கும் வகையில் சுகாதார நிறுவனத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குரங்கம்மை என்று சொல்வதில் மனத்தைப் புண்படுத்தும் இனவாதம் உள்ளது என்று சொல்லி ஈராண்டுக்குமுன் இனி Mpox என்ற சொல்லைப் பயன்படுத்தும்படி உலகச் சுகாதார நிறுவனம் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டது.
அந்தக் வைரஸ் பரவாமல் தடுக்க என்ன செய்யவேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தெரியும் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் மூத்த அதிகாரி கூறினார்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் mpox நோய் ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றிடமிருந்து முதல் தடுப்புமருந்தைப் பெற முடியும் என்று அந்நாடு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.