உலகின் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை
உலகின் உணவு உற்பத்தியில் பாதிக்கும் மேல் ஆபத்திற்கு ஆளாகலாம் என்று புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.
உலகளவு நீர் நெருக்கடியால், 2050ஆம் ஆண்டுக்குள் இந்த நிலைமை ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது
தண்ணீர்ப் பொருளியலுக்கான உலக ஆணையக் குழு அறிக்கையை வெளியிட்டது.
நீர் நெருக்கடியால் நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 8 சதவீதம் இழக்கலாம் என கூறப்படுகின்றது.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் அது 15 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
மோசமான பொருளியல்நிலை, வளங்களை முறைகேடாகப் பயன்படுத்துதல் போன்றவை உலக நீர் நெருக்கடியை மோசமாக்கியதாக அறிக்கை குறிப்பிட்டது.
தண்ணீர்ப் பொருளியலுக்கான உலக ஆணைக்குழுவின் இணைத்தலைவரான அதிபர் தர்மன் சண்முகரத்தினம் நெல்லைப் பயிரிடுவது சிரமமாகி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
பயிர் விளையும் ஆசியப் பகுதிகளில் வறட்சி அதிகரிக்கிறது, தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது என கூறப்படுகின்றது.