தென்னாப்பிரிக்காவில் தங்கத்தில் சுரங்தக்தில் சிக்கிய தொழிலாளர்கள் : நூற்றுக்கணக்கானோர் பலி!
தென்னாப்பிரிக்காவில் கைவிடப்பட்ட சுரங்கத்தின் அடியில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் வடமேற்கில் உள்ள ஸ்டில்ஃபோன்டைனில் உள்ள கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் சட்டவிரோதமாக சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சுரங்கத்தின் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.
அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி கைது செய்யும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டதை தொடர்ந்து கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் பலர் அதில் சிக்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 2 times, 1 visits today)