ஸ்வீடனில் 113 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை இடமாற்றம் செய்ய நடவடிக்கை
ஸ்வீடன் நாட்டின் கிருணா நகரில் அமைந்துள்ள 113 ஆண்டுகள் பழமையான தேவாலயம், இடமாற்றம் செய்யப்படுகின்றது.
அதே வடிவமைப்பில் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு அதனை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய இரும்புத் தாது சுரங்கம் அருகிலுள்ள இந்த தேவாலயம், சுரங்கம் விரிவாக்கப்படவுள்ளதையடுத்து பாதுகாப்பு காரணமாக இடம் மாற்றப்படுகிறது.
600 டன் எடையுள்ள இந்த சிவப்பு நிற மர தேவாலயம், அதன் அஸ்திவாரத்துடன் டிரெய்லர் மூலம் மெதுவாக நகர்த்தப்படுகின்றது.
கிருணா தேவாலயம், நகரின் முக்கிய அடையாளச் சின்னமாகவும், பாரம்பரியக் கட்டிடமாகவும் விளங்கியது.
இந்த அதிரடியான இடமாற்றப் பணிகளில், பல்வேறு தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் கட்டிடப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
(Visited 11 times, 1 visits today)




