இலங்கை செய்தி

அரச ஊழிர்களுக்கு வீட்டிலிருந்து வேலை?

வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமை குறித்து மேலும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது குறித்து ஜனாதிபதிக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது குறிப்பாக சுகாதாரம், கல்வி, கைத்தொழில், விவசாயம் மற்றும் கடற்றொழில் போன்ற துறைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்தந்தத் துறைகளில் தற்போதைய எரிபொருள் தேவைகள் குறித்து அமைச்சுக்களின் செயலாளர்களால் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த ஜனாதிபதி, சுகாதாரத்துறை போன்றவற்றுக்குத் தேவையான அத்தியாவசிய எரிபொருள் கையிருப்புகளைப் பிரதேச ரீதியாகப் பராமரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயுமாறு கேட்டுக்கொண்டார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்து முன்கூட்டியே எதிர்வுகூற முடியாது என்பதால், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், அதற்காக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறையை (QR Code) மேலும் முறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள டிஜிட்டல் குறியீட்டு முறையில் காணப்படும் குறைபாடுகளை மிக விரைவில் திருத்தியமைத்து அதனைப் புதுப்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். மேலும், உருவாகும் புதிய நிலைமைகள் குறித்து தொடர்ச்சியான கண்காணிப்புடனும் அவதானத்துடனும் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு துறையும் தனித்தனியாக முடிவெடுப்பதற்குப் பதிலாக, ஒட்டுமொத்தமாகச் சிந்தித்து சவால்களுக்கான மாற்று வழிகளைக் கண்டறிந்து செயற்படுத்த வேண்டும் என்றும் இதற்காகப் பரஸ்பர புரிந்துணர்வுடன் விரைவாகச் செயற்படுமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதார ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷான் கமகே ஆகியோருடன் சுகாதாரம், கல்வி, கைத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!