ஜெர்மனியில் சூரிய ஒளி, காற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி ஆரம்பம்
ஜெர்மனியில் சூரிய ஒளி, காற்று என்பவற்றில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றது.
ஜெர்மன் அரசாங்கமானது சுற்றுப்புற சூழலை பாதுகாக்கின்றவகையில் இயற்கையின் ஊடாக எரிபொருட்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதாவது காற்று மற்றும் சூரிய ஒளி இருந்து மின்சாரத்தை செயற்கையான முறையில் பெறுவதற்கு துரிதப்படுத்தி வருகின்றது.
2025 ஆம் ஆண்டில் கரியமல வாயுவின் வெளியேற்றத்தை குறைப்பதற்கு ஜெர்மன் அரசாங்கம் சில நிர்ணயங்களை நியமித்து இருந்தது.
தற்பொழுது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் ஜெர்மன் அரசாங்கம் இந்த நிர்ணய எல்லையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது குறித்த நிர்ணயத்தை ஜெர்மன் அரசாங்கம் அடையவில்லை என தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிர்ணய எல்லையை ஜெர்மன் அடைவதற்காக ஜெர்மன் அரசாங்கமானது நிலக்கரி சுரங்கங்களில் இருந்து மின்சாரங்களை உற்பத்தி செய்கின்ற பல நிறுவனங்களை மூடி வருகின்றது.
நிலக்கரி சுரங்கங்களில் இருந்து மின்சார உற்பத்தியை பெறுவதை படிபடியயாக குறைக்கும் நோக்கில் கரியமல வாயுவின் செயற்பாட்டை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர முடிந்துள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.