மகளிர் உலகக் கோப்பை – முக்கிய வெற்றியை தேடி களமிறங்கும் இலங்கை அணி

மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை பங்கேற்கும் மற்றொரு போட்டி இன்று நடைபெறவுள்ளது.
வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இந்த போட்டி கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
இங்கிலாந்து அணி இதுவரை பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 04 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இலங்கை பங்கேற்ற இரண்டு போட்டிகளில், ஒரு போட்டி தோல்வியடைந்துள்ளது, மற்றொன்று மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை அணி ஒரு புள்ளி மாத்திரமே பெற்றுள்ளது. எனவே, இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமாகும்.
மேலும் நியூசிலாந்து மகளிர் அணி நேற்று பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 09 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி 39.5 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விட்கெட்களையும் இழந்து தோல்வியடைந்துள்ளது.