மகளிர் உலகக் கோப்பை – இலங்கை, பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்து
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்தவகையில்,கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 26வது போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
நாணய சுழற்சியை வென்று இலங்கை முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இந்நிலையில், போட்டியின் ஆரம்பத்திலேயே மழை குறுக்கிட்டதால் DLS (Duckworth–Lewis–Stern) முறையில் இரு அணிகளுக்கும் 34 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 4.2 ஓவர்களில் 18 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து பல மணி நேரம் இடைவிடாது மழை பெய்ததால் நடுவர்களால் போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)





