மகளிர் உலகக் கோப்பை – DLS முறையில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்தவகையில், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 22வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடின.
நாணய சுழற்சியை வென்று பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி மழை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்கள் முடிவில் 312 ஓட்டங்களை பெற்றது.
இதையடுத்து 313 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 35 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
பின்னர் நடுவர்களால் DLS (Duckworth-Lewis-Stern) முறையில் பாகிஸ்தான் அணிக்கு 20 ஓவர்களில் 234 ஓட்டங்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 83 ஓட்டங்களை மட்டுமே பெற்று பாகிஸ்தான் அணி தோல்வியடைந்துள்ளது.
இந்த தோல்வின் மூலம் பாகிஸ்தான் அணி 2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.