செய்தி

மகளிர் உலகக் கோப்பை – பாகிஸ்தான் அணிக்கு 312 ஓட்டங்கள் இலக்கு

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

அந்தவகையில், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் 22வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.

நாணய சுழற்சியை வென்று பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி மழை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்கள் முடிவில் 312 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அணிக்காக சிறப்பாக விளையாடிய லோரா வோல்வர்ட்ட் (Laura Wolvaardt) 90 ஓட்டங்களும் மரிசன்னே காப் (Marizanne Kapp) 68 ஓட்டங்களும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், 313 ஓட்ட இலக்கை நோக்கி விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 35 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமானதாகும்.

(Visited 2 times, 2 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி