மகளிர் உலகக் கோப்பை – இந்திய அணிக்கு 339 ஓட்ட இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலிய அணி
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்தவகையில், நவி மும்பையில்(Navi Mumbai) நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றது.
நாணய சுழற்சியை வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இந்நிலையில், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றது.
ஆஸ்திரேலிய அணி சார்பில், ஃபோப் லிட்ச்ஃபீல்ட்(Phoebe Litchfield) 119 ஓட்டங்களும் எல்லிஸ் பெர்ரி(Ellyse Perry) 77 ஓட்டங்களும் ஆஷ்லீ கார்ட்னர்(Ashley Gardner) 63 ஓட்டங்களும் குவித்தனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில், ஸ்ரீ சரணி(Sri Sarani), தீப்தி சர்மா(Deepti Sharma) ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
(Visited 1 times, 1 visits today)





