Womens WC – இந்திய அணி 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்த வகையில் இன்றைய போட்டியில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் தோல்வியடைந்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 247 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து, 248 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர் சிட்ரா அமின் சிறப்பாக விளையாடி 81 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தார்.
இவரை தொடர்ந்து வந்த பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியின் திறமையான பந்துவீச்சால் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 43 ஓவரில் 159 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் கிராந்தி கவுட், தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டும், ஸ்நே ரானா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.