Womens WC – பாகிஸ்தானுக்கு 248 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த இந்திய அணி

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்த வகையில் இன்றைய போட்டியில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா விளையாடி வருகிறது.
நாணய சுழற்சியில் தோல்வியடைந்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 247 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் பிரதிகா ராவல் 31 ஓட்டங்களும், ஸ்மிருதி மந்தனா 23 ஓட்டங்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ஓட்டங்களும், தீப்தி சர்மா 25 ஓட்டங்களும் பெற்று கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணி சார்பில், டயானா பெய்க் 4 விக்கெட்களும் பாத்திமா மற்றும் சாதியா தலா ஒரு விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர்.
(Visited 5 times, 1 visits today)