Womens WC – 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்த வகையில் அசாமின் கவுகாத்தியில் நடைபெற்ற 8வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்காளதேச அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வங்காளதேசம் 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்கள் குவித்தது.
வங்கதேச அணி சார்பில் சொபானா 60 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில், 179 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் போட்டியின் இடையில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் கேப்டன் ஹீதர் நைட் மற்றும் சார்லி டீன் இணைந்து 79 ஓட்டங்கள் சேர்த்தனர்.





