Womens WC – இங்கிலாந்துக்கு எதிராக 178 ஓட்டங்கள் குவித்த வங்கதேசம்

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்த வகையில் அசாமின் கவுகாத்தியில் நடைபெறும் 8வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்காளதேச அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதையடுத்து, வங்காளதேச தொடக்க வீராங்கனைகளாக ரூப்யா ஹைதர், ஷார்மின் அக்தர் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அவர்களை தொடர்ந்து களமிறங்கிய சொபானா பொறுப்புடன் விளையாடி 60 ஓட்டங்கள் சேர்த்தார். இறுதியில் வங்காளதேசம் 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்கள் மட்டுமே பெற்றுக்கொடுத்தது.
சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து வீராங்கனை சோபியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
(Visited 3 times, 1 visits today)