Womens WC – ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்த வகையில், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 9வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 221 ஓட்டங்கள் பெற்று கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி வீராங்கனைகள் ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சில் தடுமாறி குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 36.3 ஓவரில் 114 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
ஆஸ்திரேலியா அணி சார்பில் கிம் கார்த் 3 விக்கெட்களும், மேகம் ஸ்கட் மற்றும் சுதர்லேண்டு ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களும் கைப்பற்றினர்.
இதன் மூலம் 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.