செய்தி விளையாட்டு

ஆண்கள் இந்திய அணியின் சாதனையை முறியடித்த பெண்கள் அணி

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து இரு மகளிர் அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 435 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளாக மந்தனா (135), பிரதிகா ராவல் (154) சதம் அடித்து அசத்தினர். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

மேலும் அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் நியூசிலாந்து அணி உள்ளது.

இதனையெல்லாம் விட ஒருநாள் போட்டியில் ஆண்கள் இந்திய அணி குவித்த ரன்களை விட பெண்கள் அணி ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.

ஆண்கள் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 418 எடுத்ததே அதிக ரன்களாக இருந்தது. அதனை தற்போது பெண்கள் முறியடித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!