மகளிர் T20 உலகக் கோப்பை அட்டவணை மற்றும் பரிசு தொகை அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ICC வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் 3ம் தேதி முதல் போட்டி நடைபெறவுள்ளது.அக்டோபர் 20 ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக 66.64 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பையை வெல்லும் அணிக்கு 19.60 கோடியும் ரன்னர் அப் அணிக்கு 9.80 கோடியும் அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிக்கு 5.65 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 35 times, 1 visits today)