மகளிர் T20 உலகக் கோப்பை – முதல் வெற்றியை பதிவு செய்த வங்கதேசம்
9வது மகளிர் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்கியது.
வருகிற 20ந்தேதி வரை நடக்கும் 20 ஓவர் உலக கோப்பையில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிக்கப் படுள்ளன.
ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன.
பி பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இன்று சார்ஜாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்கதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோபனா 36 ரன்கள் அடித்தார். ஸ்காட்லாந்து அணி சார்பில் சஸ்கியா மெக் ஹார்லி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 120 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி வங்காளதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது.
இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்து ஸ்காட்லாந்து தோல்வியடைந்தது.
அதிகபட்சமாக ஸ்காட்லாந்து அணி சார்பில் சாரா ஜெனிபர் பிரைஸ் 49 ரன்கள் எடுத்தார்.