பிரம்மாண்டமாக ஆரம்பமான மகளிர் பிரீமியர் லீக் 2024
																																		மகளிர் பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் தொடர் அறிமுக நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. துவக்க விழாவில் பங்கேற்ற ஷாருக் கான் அதிரடியாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.
பிரமாண்டமாக துவங்கிய அறிமுக நிகழ்ச்சியில் ஷாருக் கானை தொடர்ந்து பாலிவுட் நட்சத்திரங்களான கார்திக் ஆர்யன் சித்தார்த் மல்ஹோத்ரா, டைகர் ஷெராஃப், வருண் தவான் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோரும் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடி அசத்தினர்.
கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து 2024 மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி துவங்கியது.
இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
(Visited 10 times, 1 visits today)
                                    
        



                        
                            
