செய்தி விளையாட்டு

மகளிர் ஆசிய கோப்பை – அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை

ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டித் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இலங்கை அணி தகுதிப்பெற்றுள்ளது

இன்றைய போட்டியில் தாய்லாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இவ்வாறு அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தாய்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி தாய்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 11.03 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அணித்தலைவி Chamari Athapaththu அதிகபட்சமாக 49 ஓட்டங்களையும், Vishmi Gunaratne 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

(Visited 48 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி