மகளிர் தினத்தில் துருக்கியில் ஒன்றுக்கூடிய பெண்கள் : நூதனமான முறையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு எதிரான சமத்துவமின்மை மற்றும் வன்முறையை எதிர்த்து, சனிக்கிழமை துருக்கிய நகரங்களின் வீதிகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் அணித் திரண்டுள்ளனர்.
இஸ்தான்புல்லின் ஆசியப் பகுதியில், கடிகோயில் நடந்த ஒரு பேரணியில், டஜன் கணக்கான மகளிர் குழுக்களின் உறுப்பினர்கள் ஆடி,பாடி வண்ணமயமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தை கலகப் பிரிவு உடை அணிந்த அதிகாரிகள் மற்றும் தண்ணீர் பீரங்கி லாரி உட்பட, ஒரு பெரிய போலீஸ் பிரசன்னம் மேற்பார்வையிட்டது.
பெண்களின் பங்கு திருமணம் மற்றும் தாய்மையுடன் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை எதிர்ப்பாளர்கள் எதிர்த்தனர், “குடும்பம் நம்மை வாழ்க்கையுடன் பிணைக்காது” மற்றும் “நாங்கள் குடும்பத்திற்கு தியாகம் செய்யப்பட மாட்டோம்” என்று எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.