தலிபான்களால் சிரம்ப்படும் பெண்கள்- ஆஸ்திரேலியா தூதுவர் கவலை
தலிபான்கள் மாறவேயில்லை என ஆஸ்திரேலியாவிற்கான ஆப்கானிஸ்தானின் தூதுவர்தெரிவித்துள்ளார். இதனை ஆப்கானிஸ்தான் தூதுவர் வஹிதுல்லா வசி செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
தலிபான்கள் ஒருபோதும் மாறவில்லை அவர்கள் 1990 இன் மிகவும் பயங்கரமான ஆபத்தான கொள்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,தன்னிச்சையாக தடுத்துவைத்தல், பலவந்தமாக காணாமல்செய்தல் ,கூட்டு தண்டனைகள் ,சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள், சித்திரவதைகள் போன்றவை தொடர்ந்தும் தலிபானின் ஆட்சியின் கீழ் வழமையான விடயங்களாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்களிற்கு முன்னர் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் அவர்கள் பெண்களை பொதுவாழ்க்கையிலிருந்து அகற்றியுள்ளனர்.அத்துடன் பாடசாலைகள் பல்கலைகழகங்களில் இருந்து தடை செய்துள்ளனர் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கல்விகற்பதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ள ஆப்கானை சேர்ந்த பெண்கள் சிறுமிகளின் நிலையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய பல்கலைகழகங்கள் ஈடுபடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.