ஆப்கானிஸ்தானின் முக்கிய பூங்காவிற்குள் பெண்கள் நுழைய தடை!

ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் உள்ள முக்கிய தேசிய பூங்காவிற்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேன்ட் இ அமீர் தேசிய பூங்காவிற்குள் பெண்கள் ஹிஜாப் அணிந்த பிறகும் அதனை சரியாக அணியவில்லை என்ற காரணத்தால், அதற்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உரிய தீர்வு கிடைக்கும் வரை பூங்காவில் பெண்கள் செல்ல தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானின் முதல் பூங்காவாக பெயரிடப்பட்டது, பேண்ட் இ அமீர் பூங்கா ஆப்கானிய குடும்பங்கள் மத்தியில் பிரபலமான இடமாக கருதப்படுகிறது.
(Visited 14 times, 1 visits today)