ஜெர்மனியில் கணவனால் பாதிக்கப்படும் பெண்கள் – அதிகாரிகளுக்கு வரும் அழைப்புகள்
ஜெர்மனியில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பாரியளவு அதிகரித்துள்ளதாக பெண்களுக்கு ஆதரவாக இயங்குகின்ற அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
அதாவது 2023 ஆம் ஆண்டு இவ்வாறு 59000 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்களுக்கு வன்முறை சம்பவங்கள் ஏற்படும் பொழுது இவர்கள் விசேட தொலை தொடர்பு இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் வன்முறைகளை முறையீடு செய்ய முடியும்.
இந்நிலையில் மத்திய தொலை தொடர்பு நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு 59000 இவ்வாறு பதிவுகள் கிடைக்கபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இவ்வாறு இந்த அமைப்புக்கு வந்த தொலைபேசியின் அழைப்புக்களின் எண்ணிக்கையானது 12 சதவீதமாக உயர்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு இந்த அமைப்புக்கு மொத்தமாக 25000 அழைப்புக்கள் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில் இவ்வகையான் பெண்களுக்கான வன்முறையில் ஏற்படுத்துகின்றவர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என்றும், குறிப்பாக கணவன் அல்லது காதலனே இவ்வாறு வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்டு வருவதாகவும், மேலதிகமாக 20 சதவீத சம்பவங்கள் பிற நபர்கள் தொடர்புடைய விடயமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.