இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணத்தில் பெண் செய்த செயல்
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணத்தைச் சட்டவிரோதமாகப் புழக்கத்தில் விட்டதாகத் தொடர்புடைய ஒரு சந்தேக நபர், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சந்தேக நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் மறைந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பணத்தைப் புழக்கத்தில் விடுவதற்காக, நாட்டின் இரண்டு தனியார் வங்கிகளில் இரண்டு கணக்குகளைத் திறந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மூலம் அவர் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 13 ஐச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஆவார்.
சம்பவம் தொடர்பாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 6 times, 6 visits today)





