ஐரோப்பா

வானவில் நிறத்தில் காதணி அணிந்த பெண்- ரஷ்ய நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

ரஷ்யாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் அதன் ஆதரவு செயல்பாடுகளுக்கு அந்நாட்டு கோர்ட்டு தடை விதித்துள்ளது. குறிப்பாக, கடந்த நவம்பர் மாதம் உத்தரவில் தன்பாலின ஈர்ப்பு ஆதரவு அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என கோர்ட்டு அறிவித்துள்ளது. தன்பாலின ஈர்ப்பு ஆதரவு அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ரஷ்ய அரசு ஈடுபட்டு வருகிறது .

அதேபோல், தன்பாலின ஈர்ப்பை ஆதரிக்கும் வகையிலான வானவில் நிற கொடி, அது தொடர்பான பொருட்கள், புகைப்படங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வானவில் நிறத்தில் காதணி அணிந்த பெண்ணுக்கு ரஷ்ய கோர்ட்டு சிறை தண்டனை விதித்துள்ளது. ரஷ்யாவின் நிஸ்னி நவ்ஹொராட் பகுதியை சேர்ந்த அனஸ்டசியா எர்ஷொவா பொது இடத்தில் வானவில் நிறத்திலான கம்மல் அணிந்துள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்த பொலிஸார் கடந்த வாரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விசாரணை நடத்திய கோர்ட்டு எர்ஷொவாவுக்கு 5 நாட்கள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Russians fined, jailed over rainbow-coloured items after LGBTQ+ ban

அதேபோல், சரடொவ் பகுதியை சேர்ந்த புகைப்பட கலைஞர் இனா மொசினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வானவில் நிற கொடி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். வானவில் நிற கொடி தன்பாலின ஆதரவாளர்களின் கொடி என்பதால் இனா மொசினா மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இனா மொசினா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தான் நிரபராதி என அவர் வாதிட்டார். மேலும், தன்பாலின ஈர்ப்பு ஆதரவு அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என அறிவிப்பதற்கு முன்பாகவே வானவில் நிற கொடி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டேன். இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்றும் மொசினா வாதிட்டார். ஆனால், இருதரப்பு வாதத்தையும் கேட்ட கோர்ட்டு மொசினாவுக்கு 1,500 ரூபெல் (இலங்கை மதிப்பில் 5,182 ரூபா) அபராதம் விதித்தது. இதையடுத்து, வழக்கை முடித்துவைத்த கோர்ட்டு மொசினாவை விடுதலை செய்தது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content