கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் – பையில் சிக்கிய பொருள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மலேசியாவிலிருந்து நேற்றைய தினம் இரவு 07.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர், சந்தேக நபர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 455 இலத்திரனியல் சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
(Visited 38 times, 1 visits today)