சீனாவில் காதலிப்பதாக கூறி 36 பேருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

சீனாவின் சென்ஸன் பகுதியில் 36 பேரை காதலிப்பதாக கூறி ஒரு பெண் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் சுமார் 140,000 டொலர் கடனுக்கு உள்ளாகியுள்ளனர்.
லியு ஜியா என்று அறியப்படும் அந்தப் பெண் ஆசைவார்த்தை பேசி பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரையும் ஹுய்ச்சௌ நகரிலும் குவாங்டோங் மாநிலத்திலும் வீடு வாங்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவர் 30 வயதுடையவர் என்று நம்பப்படும் லியு ஜியாவைக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இணையம் வழி சந்தித்து விரைவில் அவர் மீது காதல் வயப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த மென்மையான குணம்படைத்தவர் என நம்பியதாக நபர் கூறினார்.
லியு ஜியா தாம் ஹூனான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் சென்ஸனில் மின்வர்த்தகத் துறையில் பணிபுரிவதாகத் தம்மிடம் கூறியதாகவும் நபர் தெரிவித்தார்.
அவர்கள் திருமணம் செய்வது குறித்து உரையாடினர் என குறிப்பிடப்படுகின்றது.