ஆஸ்திரேலியாவில் நச்சுக் காளான் கொடுத்து குடும்பத்தை கொன்ற பெண்ணுக்கு கிடைத்த தண்டனை
ஆஸ்திரேலியாவில் நஞ்சு கலந்த காளானைத் தமது குடும்பத்தாருக்கு கொடுத்து கொன்ற பெண்ணுக்கு 33 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எரின் பேட்டர்சனுக்குக் பெண் மாமியார், மாமனார், மாமியாரின் சகோதரி ஆகியோருக்கு நச்சு உணவு கொடுத்ததுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு இவ்வாண்டு ஜூலை மாதம் நிரூபணமானது.
அவர் 2023ஆம் ஆண்டு தமது கணவரையும் கொல்ல முயன்றார். ஆனால் அவர் உயிர்தப்பினார்.
“நீ புரிந்த குற்றங்கள் பலரைப் பாதித்துள்ளன. 3 உயிர்கள் பலியாயின. கணவருக்குப் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உனது பிள்ளைகளுக்குப் பெரும் துயரத்தைக் கொடுத்திருக்கிறாய். அன்புக்குரிய தாத்தா-பாட்டியை அவர்கள் இழந்துள்ளனர்,” என வழக்கை விசாரித்த நீதிபதி கூறினார்.





