அமெரிக்காவில் இறந்து எட்டு நிமிடங்களில் மீண்டும் உயிர் பெற்று எழுந்த பெண்!
																																		அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் சுமார் 8 நிமிடங்கள் உயிரிழந்த நிலையில், மீண்டும் அவர் உயிர் பெற்றார். இதற்கிடையே உயிரிழந்த போது தனது உடலுக்கு என்ன நடந்தது. அப்போது என்ன உணர்ந்தேன் என்பது உள்ளிட்ட தகவல்களை அந்த பெண் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் கொலராடோவைச் சேர்ந்த பிரியானா லாஃபெர்டி என்ற பெண்ணே இந்த சமபவத்திற்கு முகம்கொடுத்துள்ளார். தனது உடலுக்கு மேலே தானே மிதந்தது போலவும், டைம் என்ற ஒன்றே இல்லாத ஒரு உலகத்திற்குள் நுழைந்தது போலவும் உணர்ந்ததாகக் கூறியுள்ளார்.
33 வயதான இவர், மயோக்ளோனஸ் டிஸ்டோனியா என்ற ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல் திடீரென மொத்தமாகச் செயலிழந்துவிட்டது.
அப்போது உயிர் பிரியும் தருணம் ‘ரெடியாக இருக்கிறீர்களா?’ என்று ஒரு குரல் கேட்டதாகவும் அவர் கூறுகிறார். அந்த குரல் கேட்ட அடுத்த நொடி எல்லாம் இருண்டுவிட்டதாகவும் லாஃபெர்டி தெரிவித்தார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள், மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இருப்பினும், அப்போதும் உணர்வு தன்னுடன் தொடர்ந்தது என்று அவர் கூறினார்.
லாஃபெர்டி மேலும் கூறுகையில், “மரணம் என்பது ஒரு மாயை. நமது ஆன்மா ஒருபோதும் இறப்பதில்லை. நமது உணர்வு உயிருடன் தான் இருக்கிறது. நாம் உருமாற மட்டுமே செய்கிறோம். என் எண்ணங்கள் அப்படியே இருந்தது உணர முடிந்தது. அங்கு நடந்தது ஒரு மாயை போல இருந்தது. அது ஒரு ஆசீர்வாதம் என்று சொல்லலாம் எனக் கூறியுள்ளார்.
        



                        
                            
