பீகாரில் சமோசா தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் 65 வயது விவசாயியை கொன்ற பெண்

பீகாரில் சமோசா தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 65 வயது விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
போஜ்பூர் (Bhojpur) மாவட்டத்தில் உள்ள கௌலோதிஹரி (Kaulotihari) கிராமத்தில் வசிக்கும் சந்திரமா யாதவ் (Chandrama Yadav) என்ற நபர் கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
கௌலோதிஹரி கிராமத்தில் ஒரு சிறுவன் சமோசா வாங்கச் சென்றிருந்தபோது, வேறு சில சிறுவர்கள் அவனை தாக்கி உணவை பிடிங்கியுள்ளனர்.
இது குழந்தைகள் தொடர்பான விஷயமாகக் கருதி, சந்திரமா யாதவ் சமோசா கடைக்குச் சென்றுள்ளார். பின்னர் சம்பவம் குறித்து சக கிராம மக்களிடமும் பேசத் தொடங்கினார், இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
வார்த்தை தீவிரமடைந்து, ஒரு பெண் வாளை எடுத்து யாதவின் தலையில் தாக்கினார், இதனால் அவர் பலத்த காயமடைந்துள்ளார்.
யாதவ் பாட்னாவில் (Patna) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
கொலைக்குப் பிறகு, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்து அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனர்.