குஜராத்தில் 2 மகள்களை கொன்று தற்கொலை செய்து கொண்ட பெண்
குஜராத்தின்(Gujarat) ராஜ்கோட்(Rajkot) மாவட்டத்தில் தனது இரண்டு மகள்களைக் கொன்றதாகக் கூறப்படும் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நவகம்(Navagam) நகரில் உள்ள தனது கணவர் ஜெயேஷுடன் வசித்து வந்த 32 வயது அஸ்மிதா சோலங்கி தனது ஏழு மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு மகள்களை கழுத்தை நெரித்து கொன்று பின்னர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“அஸ்மிதாவும் அவரது மகள்களும் அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர். அஸ்மிதாவின் உடல் வீட்டின் கூரையில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது” என்று காவல் உதவி ஆணையர் ராஜேஷ் பரியா குறிப்பிட்டுளளார்.
இருப்பினும், அந்தப் பெண் தனது மகள்களைக் கொன்று தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை ஆகவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று ராஜேஷ் பரியா தெரிவித்துள்ளார்.




