கர்நாடகாவில் 12 வயது மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பெண்
கர்நாடகாவின் சிவமொக்காவில் 38 வயது பெண் ஒருவர் தனது 12 வயது மகளைக் கொலை செய்து பின்னர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் அரசு மருத்துவமனையின் செவிலியர் குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரியும் ஸ்ருதியின் கணவர் இரவுப் பணி முடிந்து வீடு திரும்பியபோது சம்பவம் குறித்து அனைவருக்கும் தெரியவந்துள்ளது
ஸ்ருதி மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸார் கொலை மற்றும் இயற்கைக்கு மாறான மரணம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)




