முதலையிடம் சிக்கி உயிரிழந்த பெண்
அம்பலாந்தோட்டை, புழுலய பிரதேசத்தில் வளவே ஆற்றில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலையிடம் சிக்கி உயிரிழந்துள்ளார்.
75 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணை முதலை பிடித்து இழுத்த போது அருகில் இருந்தவர்கள் அலறி துடித்ததில் முதலை அவரது காலை உடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை அம்பலாந்தோட்டை, வடுறுப்பா பிரதேச வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது.
(Visited 17 times, 1 visits today)





