இலங்கை

தனியார் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் பலி!

கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதிக்கு அருகில் தனியார் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் நேற்று (19) உயிரிழந்துள்ளார்.

கோட்டையிலிருந்து பேட்டை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, சாலையோரம் நடந்து சென்ற பாதசாரிகள் மீது மோதியதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் அடையாளம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியை கைது செய்ய கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்