சீனாவில் தங்கச் சட்டியில் உணவு சாப்பிட்ட பெண் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
சீனாவில் 1 கிலோ எடைகொண்ட தங்கச் சட்டியில் உணவு சாப்பிட்ட பெண் ஒருவர் இணையத்தில் வைரலாகியுள்ளார்.
அதன் மதிப்பு 700,000 யுவானாகும். சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அந்தத் தங்கச் சட்டியில் உணவு சாப்பிடும் காணொளியை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் இரு நகைக் கடைகளின் உரிமையாளர் என கூறப்படுகின்றது.
தங்கச் சட்டி அந்தப் பெண்ணுக்குச் சொந்தமல்ல. அவரது நண்பரின் ஆலையில் செய்தது.
ஒரு வாடிக்கையாளருக்காகச் செய்யப்பட்ட தங்கச் சட்டி அது என்று அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் அப்படிப்பட்ட தங்கச் சட்டியைப் பற்றிக் கேள்விபட்டதில்லை என்பதால் அதனைப் பயன்படுத்திப் பார்க்க விரும்பியதாக அவர் தெரிவித்தார்.
தங்கச் சட்டியை வாங்கியவரின் அனுமதியுடன் அதனைப் பயன்படுத்தியதாக அவர் சொன்னார்.





