பரிதாபாத்தில் ஓடும் வேனில் 2 மணி நேரம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்
பரிதாபாத்தில்(Faridabad) ஓடும் வேனில் 28 வயது பெண் ஒருவர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் சாலையில் தூக்கி எறியப்பட்டுள்ளார்.
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இடைப்பட்ட இரவில், திருமணமான பெண் வீட்டிற்குச் செல்வதற்காக வாகனத்திற்காகக் காத்திருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாலையில் நின்ற பெண்ணை இரண்டு இளைஞர்கள் வீட்டில் இறக்கிவிடுவதாக உறுதியளித்து அவளை வாகனத்தில் ஏற்றினர்.
அந்தப் பெண் சுமார் இரண்டரை மணி நேரம் வேனில் இருந்ததாகக் கூறப்படுகிறது, அங்கு குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
அதிகாலை 3 மணியளவில் ஓடும் வேனில் இருந்து அந்தப் பெண் தூக்கி எறியப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு முகத்தில் பலத்த காயம் மற்றும் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
குறித்த பெண் திருமணமானவர் என்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர் என்றும் குடும்பத் தகராறு காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து வசிக்கிறார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் பயன்படுத்திய வேன் மீட்கப்பட்டுள்ளது.





