இலங்கை

தலங்கமவில் உள்ள விடுதி ஒன்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

தலங்கம நெரலு உயன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த பெண்ணின் வசமிருந்த தேசிய அடையாள அட்டையில் இருந்து அவர் 1973 ஆம் ஆண்டு பிறந்தவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மரணம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும், தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஊடக அறிக்கையின்படி, பெண் ஒரு மனநல மருத்துவர் என்றும், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார் என்றும் கூறப்படுகிறது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!