ஆசியா செய்தி

தாய்லாந்து மசாஜ் நிலையத்தில் கழுத்தைத் திருப்பி சிகிச்சை – பெண் மரணம்

தாய்லந்தில் தோள்பட்டை வலிக்காக மசாஜ் நிலையம் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Phing Chyada என்ற பாடகியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் தாய்லந்து ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அவர் கடந்த நவம்பர் மாதம் தோள்பட்டை வலியிருந்து நிவாரணம் பெறுவதற்காக மசாஜ் நிலையம் ஒன்றின் உதவியை நாடினார்.

தோள்பட்டை வலியை நீக்கக் கூடத்தில் அவரின் கழுத்தைத் திருப்பி உடல்பிடிப்புச் சேவை அளிக்கப்பட்டது.

2 நாளுக்குப் பிறகு கழுத்தின் பின்புறம் அவருக்கு வலி ஏற்பட்டது. வலது கை வலுவிழந்தது. சில வாரங்களுக்குப் பிறகு அவரது உடல் 50 சதவீதம் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது.

Chyada உயிரிழந்துவிட்டார் என்று நேற்று Facebookஇல் பகிரப்பட்ட தகவல் குறிப்பிட்டது.

கழுத்து மிகவும் பலவீனமான பகுதி என்றும் அதனைப் பலமாக அழுத்தினால் மூளையையும் முதுகெலும்பையும் இணைக்கும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படலாம் என்றும் அந்த Facebook பதிவு குறிப்பிட்டுள்ளது.

கழுத்தையும் முதுகெலும்பையும் பிடித்துவிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்து தலைவலி, வாந்தி, மயக்கம், கை காலில் சோர்வு ஆகியவை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுரை கூறப்பட்டது.

கழுத்தை வலுவாகத் திருப்பும்போது கண் பார்வை பாதிக்கப்படக்கூடும் என்று தாய்லந்து நரம்பியல் நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். எவ்வளவு அழுத்தமாக அல்லது எத்தனை முறை செய்கிறோம் என்பதைப் பொறுத்து அதன் பாதிப்புகள் மோசமாக அமையும்.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!