பிரித்தானியாவில் சொகுசுக் கப்பலில் இருந்து விழுந்து பெண் மரணம்
பிரித்தானியாவில் சேனல் (Channel) தீவுகளுக்கு அருகே சொகுசுக் கப்பலிலிருந்து விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
20வயதுகளில் உள்ள அந்தப் பெண்ணைத் தேடத் தகவல் வ0ழங்கப்பட்டுள்ளது. பிரெஞ்சுத் தேடல், மீட்புப் பணிக் குழு அவரைக் கடலிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்டுள்ளனர்.
எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சொகுசுக் கப்பல் பிரித்தானியாவின் சவுதாம்டன் நகருக்குச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பெண் காணாமல்போனதாக MSC Virtuosa சொகுசுக் கப்பல் தெரிவித்தது. பிரெஞ்சு பொலிஸார் விசாரணை நடத்துகிறது.
அந்தப் பெண் அதிகாலை வேளையில் கப்பலிலிருந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.





