சீனாவின் விமான நிலைய சோதனையில் பெண்ணை திணற வைத்த அளவுக்கு அதிகமான மேக்கப்

சீனாவின் ஷங்ஹாய் நகரிலுள்ள விமான நிலையத்தில் அங்க அடையாளச் சோதனையைக் கடக்க முடியாமல் பெண் ஒருவர் திணறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவருடைய முகத்தில் பயன்படுத்தப்பட்ட மேக்கப் அதற்கு காரணமாகியுள்ளது. சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளியில் பெண் தம்முடைய மேக்கப்பை அகற்றியுள்ளார்.
எனினும் மேக்கப்பை நீக்குவதற்கு முன் அவரின் முகம் எப்படி இருந்தது என்பதைப் பார்க்கமுடியவில்லை. அங்க அடையாளக் கருவி அடையாளம் காணமுடியாத அளவிற்குப் பெண் அதிக மேக்கப் பயன்படுத்தியிருந்தாரா இணையவாசிகள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அங்க அடையாளக் கருவி பழுதடைந்திருக்கலாம் என சிலர் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் பெண் மேக்கப்பை அகற்றிய பின் அங்க அடையாளச் சோதனையைக் கடந்தாரா என்பது தெரியவில்லை.
(Visited 2 times, 2 visits today)