களுத்துறை சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கடத்த முயன்ற பெண் கைது

களுத்துறை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட 34 வயதுடைய பெண் ஒருவர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முலட்டியான, பயாகல பகுதியைச் சேர்ந்த பெண் சந்தேகநபர், களுத்துறை சிறைச்சாலையில் 550 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முயன்றதாகவும், அங்கு அவரது கணவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் தனது கணவருக்கு உணவு வழங்கும் போர்வையில் கொண்டு வந்த கோழிப் பொதியின் எலும்புகளில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர் தம்பதியினரின் 06 வயது மகளுடன் சிறைச்சாலைக்கு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 20 times, 1 visits today)