டெல்லி விமான நிலையத்தில் போலி வேடமணிந்து போதைப்பொருள் கடத்த முயன்ற பெண் கைது
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்(Delhi’s Indira Gandhi International Airport), தாய்லாந்திலிருந்து(Thailand) வந்த ஒரு பெண், தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரி என்று தன்னைக் காட்டிக் கொள்ள முயன்றபோது கைது செய்யப்பட்டுளளார்.
மேலும், அவரது உடைமைகளை சோதனை செய்ததில் 11.350 கிலோகிராம் எடையுள்ள 20 ஹைட்ரோபோனிக் கஞ்சா (hydroponic weed) பொதிகள் மீட்கப்பட்டன.
விசாரணையின் போது, அந்தப் பெண் விமான நிலைய கழிப்பறைக்குள் சென்று, தேசிய புலனாய்வு முகமை மற்றும் தேசிய சின்னம் குறிக்கப்பட்ட சாம்பல் நிற ஆடை அணிந்து சோதனைகள் இன்றி செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்
அந்தப் பெண் போதை மருந்து மற்றும் மனநோய் மருந்துகள் (NDPS) சட்டம், 1985ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.





