கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கேயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
இலங்கைக்கு கொக்கேய்ன் போதைப்பொருளை கடத்த முயன்ற 41 வயதுடைய பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாலை 1.50 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் கானாவிலிருந்து வந்த சந்தேக நபர் தென்னாபிரிக்க கடவுச்சீட்டில் பயணித்துள்ளார்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் அவளிடம் சுமார் 4,068 கிராம் கொக்கைன் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 142 மில்லியன் ரூபா என சுங்க பிரதி பணிப்பாளர் நாயகமும் ஊடகப் பேச்சாளருமான சிவலி அருக்கொட தெரிவித்தார்.
(Visited 1 times, 1 visits today)