இந்தியா செய்தி

WIPL – 42 ஓட்டங்களால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்தது.

கேப்டன் மெக் லேனிங் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களும், ஜெஸ் ஜோனாசன் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தஹிலா மெக்ராத் மட்டும் போராடினார்.

மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில், உத்தர பிரதேச அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தஹிலா மெக்ராத் 50 பந்துகளில் 90 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி